விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) நீடித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில் 2001/931/CFSP பொது நிலைப்பாட்டின்படி அமைக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) புதுப்பித்தது.
இந்த பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக கருதப்படும்
தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அதன் நிதி, பிற நிதி சொத்துக்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள பொருளாதார வளங்களை முடக்குவதற்கு இந்த தடை உட்பட்டது.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதாரங்களை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.