காசாவில் 5 பத்திரிகையாளர்கள் கொலை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
“காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே நடந்த வான்வழித் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப் உட்பட ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கிறது,” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் குறிப்பிட்டுளளார்.
அனஸ் அல்-ஷெரிப் ஹமாஸ் “பயங்கரவாதக் குழுவிற்கு” தலைமை தாங்குவதாகவும், இஸ்ரேலியர்களுக்கு எதிராக “ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு” பொறுப்பானவர் என்று இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது.
இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் கொண்டது, “ஆனால் இந்த வழக்குகளில் சட்டத்தின் ஆட்சியைப் பொறுத்தவரை, பத்திரிகையாளர்களை குறிவைப்பதைத் தவிர்க்க தெளிவான ஆதாரங்களை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.