புகலிடம் கோருவதற்கான புலம்பெயர்ந்தோரின் உரிமையை இரத்து செய்யும் ஐரோப்பிய நாடு

பெலாரஸுடனான தனது எல்லை வழியாக வரும்போது, புகலிடம் கோருவதற்கான புலம்பெயர்ந்தோரின் உரிமையை போலந்து நிறுத்தி வைத்துள்ளது.
போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா, தஞ்சம் கோருவதற்கான மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டத்தில் கையெழுத்திடுள்ளார்.
கலப்பினப் போர் தந்திரமாக இடம்பெயர்வு பயன்படுத்தப்படுவதாக விவரிக்கப்படுவதால், போலந்து பெலாரஸுடனான தனது எல்லையை வலுப்படுத்தி வரும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“நமது எல்லைகளின் பாதுகாப்பையும் போலந்து மக்களின் பாதுகாப்பையும் வலுப்படுத்துவது அவசியம் என்று நான் நம்புகிறேன்” புதிய சட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு ஜனாதிபதி டுடா கூறியுள்ளார்.
புதிய சட்டம், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குள் சட்டவிரோதமாக எல்லையை தாண்டியவர்களுக்கு சர்வதேச பாதுகாப்புக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் உரிமையில் தற்காலிக கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.