LNG இறக்குமதி தடை உட்பட ரஷ்யாவிற்கு எதிரான 19வது தடை தொக்குப்பை அங்கிகரித்த EU

மோதல் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான தடைகளின் 19வது தொகுப்பை ஐரோப்பிய ஒன்றிய(EU) உறுப்பு நாடுகள் புதன்கிழமை(22) அங்கீகரித்தன, இதில் ரஷ்ய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு(LNG) இறக்குமதி மீதான தடையும் அடங்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் டென்மார்க் தலைவர் தெரிவித்துள்ளார்.
LNG இறக்குமதி தடை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும், குறுகிய கால ஒப்பந்தங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு முடிவடையும் மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் ஜனவரி 1, 2027-க்கு முன் நிறுத்தப்படும்.
இந்த முழுத் தடையும், ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களை ஐரோப்பிய ஒன்றியம் நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான ஆணையத்தின் தொடக்கநிலைத் திட்ட வரைபடத்தை(initial roadmap) விட ஒரு வருடம் முன்னதாகவே அமலுக்கு வரும்.
புதிய நடவடிக்கைகளில் ரஷ்ய இராஜதந்திரிகளுக்கு கூடுதல் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய நாட்களில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே மீண்டும் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்டன.