இந்தியாவின் ராக்கெட் லாஞ்சர்களை பிரெஞ்சு ஆயுத படையில் சேர்க்க மதிப்பீடு!
இந்தியாவின் “மேக் இன் இந்தியா” முன்முயற்சிக்கு கணிசமான ஊக்கமளிக்கும் வகையில், உயர்மட்ட பிரெஞ்சு ராணுவ அதிகாரி ஒருவர் இந்தியாவின் ராக்கெட் லாஞ்சர்களை கொள்வனவு செய்வதற்கான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் (எம்பிஆர்எல்) அமைப்பை தங்கள் பிரெஞ்சி ஆயுதப் படைகளின் சாத்தியமான பயன்பாட்டிற்காக மதிப்பீடு செய்து வருவதாகத் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட லாஞ்சர் சோலார் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் மற்றும் டூப்ரோ, டாடா, மற்றும் ஆயுத தொழிற்சாலை வாரியம் போன்ற இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.
பினாகா அமைப்பு ஏற்கனவே ஆர்மீனியாவின் ஆர்டர்கள் மற்றும் பிற நாடுகளின் ஆர்வத்துடன் ஏற்றுமதி வெற்றியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.