ஐரோப்பா

உக்கிரமடைந்து வரும் போர்ச்சூழல்கள் ; சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், புதினின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நாளை சந்தித்து பேச உள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யா தொடர்ந்து போரை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கி வரும் நிலையில், உக்ரைனும் சரி சமமாக ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

ரஷ்யாவுக்கு சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. அண்மையில் தான் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வடகொரியா ஆயுத உதவியை செய்து இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதோடு அது தொடர்பான செயற்கை கோள் படங்களையும் வெளியிட்டு இருந்தது. ரஷ்யா – உக்ரைன் போர் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் உச்சம் அடைந்து இருக்கிறது.

இத்தகைய சூழலில், ரஷ்ய அதிபர் புதின் இன்று சீனா பயணம் மேற்கொண்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனாவின் மிகப்பெரும் பொருளாதார வழித்தட திட்டமான மூன்றாவது பெல்ட் அண்ட் ரோட் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 130 நாடுகள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க புதின் சென்றதாக கூறப்பட்டாலும் போர் குறித்து விவாதிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரஷ்ய அதிபர் புதினுக்கு கடந்த மார்ச் மாதம் சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அதன்பிறகு வெளிநாடு பயணம் எதுவும் மேற்கொள்ளாமல் இருந்த புதின் முதல் முறையாக தற்போது சீனா பயணம் மேற்கொண்டுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!