இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் தீவிரமடையும் மோதல் – ஆஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரையும் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ADF பணியாளர்களும் இரண்டு விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.
இந்த நடவடிக்கை இராணுவ ஆதரவை வழங்குவதற்காக அல்ல, பாதுகாப்புத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.
இதுவரை 2000 ஆஸ்திரேலிய குடிமக்கள் ஈரானை விட்டு வெளியேற உதவி கோரியுள்ளதாகவும், 1200 க்கும் மேற்பட்ட குடிமக்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற உதவி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய குடிமக்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் அல்லது ஈரானுக்கு அருகிலுள்ள பாகிஸ்தானின் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.