Eris கொவிட் அச்சம் – சிங்கப்பூர் எடுக்கவுள்ள நடவடிக்கை
சிங்கப்பூரில் Eris கொவிட் தொற்று பரவலின் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவைப்பட்டால் புதுப்பிக்கப்பிட்ட COVID-19 தடுப்புமருந்துகள் இருப்பதை உறுதிசெய்யும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அமெரிக்காவில் Eris என்று அழைக்கப்படும் EG.5 ரகக் கொவிட் பரவுகிறது.
புதிதாகப் பதிவாகும் COVID-19 சம்பவங்களில் சுமார் 17 விழுக்காட்டுக்கு அந்தக் கிருமிதான் காரணம்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் புதிய Booster தடுப்புமருந்து வெளியிடப்படும்.
அது XBB.1.5 எனும் ஓமிக்ரோன் வகை கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும்.
XBB.1.5 வைரஸ் ஓரளவுக்கு EG.5 வைரஸ் போல் இருக்கும்.
அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் தடுப்புமருந்துக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
(Visited 6 times, 1 visits today)