செய்தி வட அமெரிக்கா

பொழுதுபோக்கு போதுமானதாக இல்லை – வெள்ளை மாளிகையில் டிரம்ப் உருவாக்கும் நடன அரங்கம்

வொஷிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி அதிகாரப்பூர்வ வசிப்பிடமான வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் 200 மில்லியன் டொலர் மதிப்பில் பால்ரூம் கட்டப்பட உள்ளது.

வெள்ளை மாளிகையில் பொழுதுபோக்குக்காக பெரிய அளவிலான நடன அரங்கம் இல்லை என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 90 ஆயிரம் சதுர அடியில் 650 பேர் அமரக்கூடிய வகையில் இந்தப் புதிய பால்ரூம் கட்டப்பட உள்ளது.

கட்டுமானப் பணி செப்டம்பரில் தொடங்க உள்ளது என்றும், வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் அதிபரின் மனைவி மெலனியா மற்றும் அவரது உதவியாளர்கள், ஊழியர்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

இந்த பால்ரூம் கட்டுமானத்துக்கான முழு பணத்தையும் டிரம்ப் மற்றும் பிற நன்கொடையாளர்கள் செலுத்துவார்கள் எனவும் தெரிவித்த கரோலின் லீவிட், பால்ரூம் வரைபடங்களை வெளியிட்டார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி