செய்தி விளையாட்டு

ENGvsIND – மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அதிரடி வெற்றி

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார்.

62ஆது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தை பும்ரா தூக்கி அடிக்க, எளிதாக கேட்ச் பிடித்தனர். இதனால் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா 54 பந்தில் 5 ரன்கள் எடுத்தார்.

தேனீர் இடைவேளை வரை சிராஜ் தாக்குப்பிடித்தார். அப்போது இந்தியா 163 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 56 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர்இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பஷீர் வீசிய பந்தை சிராஜ் தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பை தாக்கியது.

இதனால் இந்தியா 170 ரன்னில் ஆல்அவுட் ஆகி 22 ரன்னில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி