ENGvsIND – இரண்டாம் நாள் முடிவில் அதிரடியாக விளையாடி 225 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், கே.எல்.ராகுல் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலே 84 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் ஜடேஜா, கம்போஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.