இலங்கை

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட ஆங்கில ஆசிரியர் கைது

கலப்புப் பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு இளம் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் நகரிலுள்ள பிரதான கலப்பு பாடசாலையில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐம்பத்தைந்து வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் குறித்து பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது பாடத்தை கற்பிக்கும் போது வகுப்பில் உள்ள மாணவிகளுக்கு விஷேட கவனம் செலுத்தி மாணவிகளின் உடலை தொட்டு, அழுத்தி, அந்தரங்க உறுப்புகளை தொட்டு துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தினசரி துஷ்பிரயோகம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டில் உள்ள பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இது தொடர்பாக குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!