ஐரோப்பா

இங்கிலாந்தின் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : தொழிற்கட்சிக்கு பெருகும் மக்கள் ஆதரவு! சுனக்கிற்கு பின்னடைவு!

பிரித்தானியாவில் இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. நாளை வரை (06.03) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் தற்போதைய நிலவரத்தின்படி  கன்சர்வேடிவ் கட்சி இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பாலான இடங்களில் பாரிய தோல்வியை தழுவியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை மற்றொரு இடைத்தேர்தல் தோல்வியை கன்சர்வேட்டிவ் கட்சி சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  ஆட்சியமைக்க தேவையான 31 இடங்களில் 05 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சி இழந்துள்ளது. இது பிரதமர் ரிஷி சுனக்கின் ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

முடிவுகளின்படி, பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!