சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
ICC T20 உலகக் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க South Africa அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி New Zealand .
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீசியது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.
170 ஓட்டங்கள் என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின் ஆலன் மற்றும் டிம் செய பெர்ட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ஓட்டங்களைப் பெற்றன.
டிம் செய்ஃபெர்ட், 33 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த தொடரிலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் அதிக ஓட்டங்கள் (463) சேர்த்த ஜோடி என்ற சாதனையை ஆலன் மற்றும் செய்ஃபெர்ட் படைத்துள்ளனர்.
இந்த தொடரில் அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக நூறு ஓட்டங்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
இணைப்பு பிரிந்தாலும் தனது அதிரடியை ஆலன் தொடர்ந்தார். அதன் பலனாக 33 பந்துகளில் சதம் கண்டார். அது நியூஸிலாந்து அணியின் வெற்றி க்கு வழிவகுந்தது.
T20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட சதம் என்று இது அறியப்படுகிறது.
12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து. அதன் மூலம் 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.





