ஐரோப்பா

ரஷ்ய சைபர் கும்பலுக்கு தடை விதித்த இங்கிலாந்து!

ரஷ்ய சைபர் கிரைம் கும்பலுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது. இதன்படி குற்றக் கும்பலை சேர்ந்த 11 பேர் மீது பிரித்தானியா தடை வித்துள்ளது.

‘இந்த சைபர் குற்றவாளிகள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல்  அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிக்கவும் முயற்சிப்பதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார்.

‘அவர்களின் அடையாளங்களை அம்பலப்படுத்துவதன் மூலம்   அவர்களின் வணிக மாதிரிகளை சீர்குலைத்து  நிறுவனங்களை குறிவைப்பதை தடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த சைபர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் பிரித்தானியாவின் மருத்துவமனைகள் பள்ளிகள்  உள்ளுர் அதிகாரிகளை குறிவைப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தடைகள் கொண்டுவரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்