ருமேனியாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்த எஞ்சின் – தீப்பற்றியதால் பரபரப்பு!

ருமேனியாவில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 17 நிமிடங்களுக்குப் பிறகு, விமான எஞ்சின் வெடித்து தீப் பரவியுள்ளது.
புக்கரெஸ்ட் விமான நிலையத்திலிருந்து நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஒராடியா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் ஒரு ஹைஸ்கை ஐரோப்பா ஏர்பஸ் A320 என்ற விமானத்திலேயே இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.
இருப்பினும், திறமையான விமானி விமானத்தைத் திருப்பி ஹென்றி கோண்டா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விமானத்தில் ஏற்படவிருந்த மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் ஆனால் விமானம் சோதனைகளுக்காக சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)