பிரித்தானியாவில் வீடு வீடாக சோதனை செய்த அதிகாரிகள்!
பிரித்தானியாவில் குப்பைகளை சோதனை செய்யும் துறைசார் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது வீடுகளில் குப்பைகள் பராமரிக்கப்படுகிற விதம் தொடர்பில் அவர்கள் ஆய்வு செய்வதோடு முறையாக மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாத குப்பைகள் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வேல்ஸில் (Wales) ஒரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சோதனை செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் 32000 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படவில்லை என்றால் 100 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 9 visits today)





