ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்காக அமுலாகும் நடவடிக்கை
Aஜெர்மனி நாட்டில் இயங்குகின்ற வெளிநாட்டவர் அலுவலகங்கள் டிஜிடல் முறையில் இயங்க வேண்டும் என்று என ஜெர்மனிய அதிபர் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஜெர்மனிய அதிபர் ஓலா சொய்ஸ் அவர்கள் எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டவர் காரியாலங்களை டிஜிடல் முறையில் தொழிற்படுத்த வேண்டும் என கோரிக்கைகயை முன்வைத்துள்ளார்.
அதாவது கடந்த காலங்களில் வெளிநாட்டவர் காரியாலங்களின் செயற்பாடுகள் கால தாமதமாக செல்கின்ற காரணத்தினால் இவ்வாறாக நவீன மயப்படுத்த வேண்டும் என இவர் தெரிவித்து இருக்கின்றார்.
இதன் காரணத்தினால் ஜெர்மன் அரசாங்கமானது ஏற்கனவே ஒரு பில்லியன் யுரோக்களை அகதிகள் விடயம் மற்றும் வெளிநாட்டவர் காரியாலங்களை நவீனப்படுத்துவதற்கு என முதலீடு செய்வதாகவும் அவர் கூறி இருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய உள்ளுர் ஆட்சி அமைச்சர்கள் ஐரோப்பாவினுடைய வெளி எல்லைகளில் வருகின்ற அகதிகள் விடயத்தில் கடுமையான ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு முடிவெடுக்க தீர்மானித்துள்ளனர்.
போலாந்துடைய பிரதமர் கருத்து வெளியிடுகையில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் தமது நாட்டிலே சர்வ ஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுடைய கருத்து கணிப்பு அடிப்படையலேயே இந்த உத்தேச புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருக்கின்றார்.