ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய மக்களுக்கு Energy Drink குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத Energy Drink கைப்பற்றப்பட்டுள்ளன.

அரச பிரதமரின் உத்தரவுக்கமைய சுகாதார அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், சட்டவிரோத சக்தி பானங்களை விற்பனை செய்த 18 வர்த்தக நிலையங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13 வர்த்தக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவருக்கு 3000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நியூசிலாந்து உணவு தரநிலைக் குறியீட்டின் கீழ், ஆற்றல் பானத்தில் இருக்க வேண்டிய கெபைன் செறிவை மீறுவது சட்டவிரோதமானது, மேலும் அந்த பானங்கள் ஒரு லிட்டரில் 320 மில்லிலிட்டர் அதிகமாக இருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான ஆற்றல் பானங்கள் விற்பனை செய்வதும் சட்டவிரோதமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சோதனைகளில், வழக்கமாக அனுமதிக்கக்கூடிய அதிகபட்ச வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக கெபைன் கலந்த ஆற்றல் பான சந்தையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காஃபின் நிறைந்த ஆற்றல் பானங்களை உட்கொள்வது மக்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்று தெற்கு ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 45 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி