முடிவுக்கு வரும் போர்? உக்ரேன் – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு!

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, உக்ரேன் யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நம்பகரமான மற்றும் தெளிவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அவசியம் குறித்து விவாதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ற்ஸ், இந்த வாரத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை யுக்ரேன் ஜனாதிபதி முன்வைத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன்காரணமாக அமெரிக்க ஜனாதிபதி விரக்தியான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், அடுத்த வாரத்தில் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டாமருக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு காசா யுத்த நிறுத்தம்குறித்து முக்கியமானது எனக் கருதப்படுகிறது.