இலங்கையில் மீண்டும் ஆரம்பமாகும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்
இலங்கையில் பண்டிகை காலப்பகுதியின் போது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனால் மந்தமடைந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் முற்றாக கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்தை சமூகத்திலிருந்து இல்லாதொழிக்க பொலிஸார் ஆரம்பித்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கிரிந்திவெல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.