இலங்கையில் மூளைக்காய்ச்சல் பரவல்? காலி சிறைச்சாலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
காலி சிறைச்சாலையின் கைதிகளுக்கிடையே மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் இருப்பதற்கும், உறவினர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை இடைநிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி சிறைச்சாலையில், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் உயிரிழந்தார்.
அத்துடன் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் 3 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் தற்போது காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூளைக்காய்ச்சல் நோயினால் காலி – வந்துரம்ப பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே உயிரிழந்தார்.
போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.