ருமேனியாவில் தொழில்வாய்ப்பு – ஏறக்குறைய 740 மில்லியன் மோசடி!
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 740 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அவ் நிறுவனத்தின் இயக்குநரை மஹரகம குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
சந்தேக நபர் நேற்று (31) நுகேகொடை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பாக 400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெற்றுள்ளது.
அதன்படி, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு 1 விசாரணைகளைத் தொடங்கியுள்ளது, மேலும் இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் 117 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 850,000 ரூபாய் முதல் 1,850,000 ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




