வெளிநாடு ஒன்றில் இலங்கைர்களுக்கு வேலைவாய்ப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
சீஷெல்ஸ் நாட்டில் செல்லுபடியாகும் பணி உத்தரவு இல்லாமல் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த சோனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் இயங்கும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றினால் இந்த சட்டவிரோத ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ததில், சீஷெல்ஸ் நாட்டு சிறைகளில் பணிபுரிவதற்காக வழங்கப்பட்ட 6 கடவுச்சீட்டுகள் மற்றும் அது தொடர்பான 6 விண்ணப்பங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நிறுவனத்தின் பணி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இலங்கையர்களை அனுப்பும் வேலைத்திட்டம் எதுவும் இல்லை எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டதாக கூறி பணம் பெறுபவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பணியகம் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.