சீனாவில் பரிமாறப்பட்ட உணவில் சிறுநீர் கழித்த ஊழியர்கள் : 4000 பேருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு!

ஷாங்காயில் உள்ள ஒரு ஹாட் பாட் கடையில் இரண்டு ஆண்கள் குழம்பில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு 4,000 க்கும் மேற்பட்ட உணவருந்துபவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
சீன ஹாட் பாட் நிறுவனமான ஹைடிலாவ் தனியார் அறையில் உணவருந்தும்போது இரண்டு ஆண்கள் தங்கள் ஹாட் பாட்டின் குழம்பில் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் வீடியோ கடந்த மாத இறுதியில் வெளியானது.
இந்நிலையில் இந்த சம்பவத்தால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை எந்த வகையிலும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்பதை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்,” என்று நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதான இருவரை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.