சீனாவில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் – எவ்வளவு தெரியுமா?

சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கப்படுகிறது.
இந்த சவாலில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.
ஊழியர்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்த சவாலை கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 முதல், இந்த நிறுவனம் உடல் எடையை குறைக்கும் சவாலை நடத்தி, தோராயமாக ₹2.47 கோடி வெகுமதிகளை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோ எடையை குறைத்து ரூ.1.23 கோடியை பிரித்துக் கொண்டனர்.
(Visited 1 times, 1 visits today)