ஜப்பானில் பணிநேரத்திற்கு முன்பதாகவே வேலையை ஆரம்பித்த ஊழியர்கள் – 11 மில்லியன் யென் வழங்க உத்தரவு!

ஜப்பானில் ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வேலையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பொது ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 11 மில்லியன் யென் (£57,000) கூடுதல் நேர ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கிஃபு மாகாணத்தின் கினன் நகரில் உள்ள 146 அரசு ஊழியர்களும் காலை 8.25 மணிக்கு, நிலையான தொடக்க நேரத்தை விட ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே பணிக்கு வரத் தொடங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அப்போதைய மேயர் ஹிடியோ கோஜிமா பிறப்பித்த இந்த உத்தரவு, அந்த (2021) ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி அமலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் 2023 ஆம் ஆண்டு கோஜிமா தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவும் நீக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் வேலை செய்த நேரங்களுக்கு இழப்பீடுகோரி வழக்குதாக்கல் செய்யப்பட்டது.
நவம்பர் 2024 இல், ஆணையம் ஊழியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது மற்றும் நகரத்திற்கு 10.9 மில்லியன் யென் (£56,581) க்கும் அதிகமான இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.