அமெரிக்காவில் ஊழியர்களின் நெகிழ்ச்சி செயல் – மருத்துவமனையில் நடந்த திருமணம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் திருமணம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மரணத்தின் விளிம்பில் இருக்கும் தந்தை தம்முடைய மகளைக் கரம்பிடித்துக் கொடுத்துள்ளார்.
அதற்காக மருத்துவமனை ஊழியர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
மருத்துவமனையின் தேவாலயத்தில் திருமணம் நடந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
கிட்டத்தட்ட ஓராண்டுக்குமுன் ஆப்ரஹாம் ஆர்சியோவுக்கு கணையப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அண்மை வாரங்களில் அவருடைய நிலை மோசமானது. ஜூன் 28ஆம் திகதி அவரது மகளின் திருமணம் வரை ஆப்ரஹாம் உயிரோடு இருப்பாரா என்ற சந்தேகம் அவருடைய குடும்பத்தினரிடையே எழுந்தது.
ஆனால் ஆப்ரஹாமின் ஆசை ஒருவழியாக நிறைவேறியது. மகளுடன் நடந்து மகளை மருமகனின் கையில் ஒப்படைத்தார்.
(Visited 26 times, 1 visits today)