ஜெர்மனியில் பணியிடங்களில் ஊழியர்கள் செய்யும் செயல் – வெளியான காரணம்
ஜெர்மனியில் தொழிலாளர்கள் வேலை தளங்களில் விடுமுறை அதிகமாக எடுப்பதாக புள்ளி விபரம் ஒன்றுவெளியாகியுள்ளது.
அதாவது தொழில் புரிகின்றவர்கள் தங்களது உடல் சுகயீனம் காரணமாக தொழிலுக்கு சமூகமளிக்காமல் இருக்கும் விடயமானது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது 2022 ஆம் ஆண்டு இவ்வாறு 132 மில்லியன் நாட்கள் வேலை செய்கின்றவர்கள் வேலைக்கு சமூகமளிக்கவில்லை என்று புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையானது 126 மில்லியன் நாட்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த நாட்கள் கூடுவதற்கு முக்கிய காரணம் கொரோனாவின் பிறகு ஜெர்மனியில் மனோவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் இவர்கள் இவ்வாறு வேலைக்கு செல்லவில்லை என்று தெரியவந்தள்ளது.
குறிப்பாக பெண்கள் 77 மில்லியன் நாட்கள் இவ்வாறு வேலைக்கு செல்ல வில்லை என்றும், ஆண்கள் 55 மில்லியன் நாட்கள் வேலைக்கு செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டை 2021 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடும் பொழுது ஆண்கள் வேலைக்கு செல்லாத எண்ணிக்கையானது 7.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாகவும்,
இந்நிலையில் பெண்கள் வேலைக்கு செல்லாத நாட்களுடைய எண்ணிக்கை 2.7 சதவீதமான உயர்வடைந்துள்ளதாகவும் இந்த புள்ளி விபரத்தில் வெளியாகியுள்ளது.