தென் கொரியாவில் அனைத்து விமானங்களிலும் அவசர பாதுகாப்பு சோதனை
தென் கொரியாவில் அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவங்களிலும் அவசரக்கால பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி 179 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இது குறித்து புதிய இடைக்கால ஜனாதிபதி சோய் சாங்-மோக் திங்கட்கிழமை கூறியதாவது:
நாட்டின் அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் செயல்படும் முறை குறித்து தீவிர பாதுகாப்பு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான விமானப் போக்குவரத்தை உறுதி செய்வதற்கு இதுபோன்ற மிகக் கடுமையான சோதனைகள் தேவைப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, நாட்டில் செயல்படும் அனைத்து போயிங் 737-800 ரக விமானங்களிலும் கூடுதலாக சிறப்பு சோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)