இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை: பிரதமர் விளக்கம்!

அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காக பயன்படுத்தும் எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இதனை கடந்த மூன்று மாதங்களாக செயலில் நிரூபித்தோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி Harini Amarasooriya அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை நாம் அடக்குமுறைக்காககப் பயன்படுத்த வில்லை. கடந்த மூன்று மாதங்களாக அச்சட்டம் அமுலில் இருக்கின்றது.

இக்காலப்பகுதிக்குள் மேற்படி சட்டம் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்குரிய ஆதாரத்தை எதிரணியால் முன்வைக்க முடியுமா? எனவும் Prime Minister கேள்வி எழுப்பினார்.

சமூகவலைத்தளங்களில் அரசாங்கத்துக்கு எதிராக எவ்வளவு போலி தகவல்கள் பரப்படுகின்றன. அவற்றுக்கு எதிராகக்கூட நாம் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, அடக்குமுறையென வெறுமனே கூக்குரல் எழுப்புவதைவிடுத்து, எங்கு, எப்போது அது நடந்தது என தெளிவாக கூறுவதே அர்த்தமுள்ள கருத்தாக அமையும். அப்போது ஏதேனும் தவறு இருந்தால்கூட அதனை எம்மால் திருத்திக்கொள்ள முடியும்.

அதேவேளை, நாம் எதிரணியில் இருந்தபோது அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தோம். அப்போது அச்சட்டம் அடக்கமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதற்குரிய நிறைய சான்றுகள் உள்ளன எனவும் பிரதமர் Dr. Harini Amarasooriya சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!