அவசரகாலச்சட்டம் நீடிப்பு: சஜித் அணி போர்க்கொடி!
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல J.C. Alawatthuwala தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இச்சட்டத்தை நீடிக்க வேண்டிய எவ்விதத் தேவைப்பாடும் நாட்டில் இல்லை. இது தொடர்பாக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.
எனவே, அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கம் இருக்கலாம். மக்களின் உண்மையான கோரிக்கைகளைச் செவிமடுப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒடுக்குவதற்கே அரசு இச்சட்டத்தைப் பயன்படுத்துகின்றது பயன்படுத்துகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது.
அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வந்த மக்கள் விடுதலை முன்னணியினர், தற்போது எரிபொருள் வரிசையைக் கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்கவும் இச்சட்டம் அவசியம் என்பது போலப் பேசுவது வியப்பளிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் J.C. Alawatthuwala மேலும் கூறினார்.





