அவசரகாலச் சட்டம் நீடிப்பு: நாடாளுமன்றம் ஒப்புதல்!
அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை Parliament மீண்டும் அங்கீகரித்துள்ளது.
அவசரகாலச்சட்டத்தை நீடித்து ஜனாதிபதி Anura Kumara Dissanayake வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அளிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விவாதத்தை அடுத்து இன்று மாலை சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அவசரலகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக, 08 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதனால் 100 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.





