இலங்கை

இலங்கை: எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – வாக்காளர்களுக்கான அறிவித்தல்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்குளிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது,

எல்பிட்டி பிரதேச சபை தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்குச் சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படும்.

வாக்குச் சீட்டுகளில் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் மாத்திரமே காணப்படும்.

வாக்களிக்கும் போது, நீங்கள் விரும்புகின்ற கட்சியின் அல்லது சுயேட்சை குழுவின் பெயர் மற்றும் சின்னம் காணப்படும் இடத்தில் (X) என்ற புள்ளடியை அடையாளமிடல் வேண்டும்.

மேலும், வாக்களிப்பதற்கு ஒரேயொரு புள்ளடியை (X) மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்தமுடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்குகளை செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12ஆம் திகதி தபால் அலுவலகங்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், அவை எதிர்வரும் 17 முதல் 20ஆம் திகதி வரை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!