உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்த எலான் மஸ்க்

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளன.
இதன் அடிப்படையில், உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
1987ம் ஆண்டு முதல் இத்தகைய பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது.
2025ம் ஆண்டு, ஆகஸ்ட் முதலாம் திகதி நிலவரப்படி, உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். ஒரே ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
பட்டியலில் உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்கிற இடத்தை, எலான் மஸ்க் தக்க வைத்துக் கொண்டு உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 401 பில்லியன் டாலராக உள்ளது. அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 10வது இடத்தில் உள்ளார். இவரை தவிர மற்ற 9 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் விவரம்:
எலான் மஸ்க் (401 பில்லியன் டொலர்)
லாரி எலிசன் (299.6 பில்லியன் டொலர்)
மார்க் ஜுக்கர்பெர்க் (266.7 பில்லியன் டொலர்)
ஜெஃப் பெசோஸ் (246.4 பில்லியன் டொலர்)
லாரி பேஜ் (158 பில்லியன் டொலர்)
ஜென்சன் ஹுவாங் (154.8 பில்லியன் டொலர்)
செர்ஜி பிரின் (150.8 பில்லியன் டொலர்)
ஸ்டீவ் பால்மர் (148.7 பில்லியன் டொலர்)
வாரன் பஃபெட் (143.4 பில்லியன் டொலர்)
பெர்னார்ட் அர்னால்ட் (142.9 பில்லியன் டொலர்)