உலகம் செய்தி

திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு – வாய்ப்பளிக்கும் எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்காவின் செயல்திறன் மேம்பாட்டுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள எலான் மஸ்க் தனது நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு திறமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, “நீங்கள் ஒரு மென்பொருள் பொறியாளராகவும், பல்வேறு விதமான செயலிகளையும் உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை code@x.com-க்கு அனுப்பி, எங்கள் நிறுவனத்தில் இணைந்து விடுங்கள்.

நீங்கள் பாடசாலைக்கு சென்றீர்களா? பட்டம் பெற்றீர்களா? பெயர்பெற்ற பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா? என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. உங்கள் திறமையை மட்டும் எங்களிடம் காட்டுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்தப் பதிவை வரவேற்பதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். திறமையை மட்டும் வைத்து பணிக்கு ஆள்சேர்ப்பு நடத்துவது சிறந்தது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர, டிக்டாக் செயலியை எலான் மஸ்க் வாங்கவிருப்பதாக வதந்திகள் கிளம்பிய நிலையில், எலான் மஸ்க்கின் இந்த வேலை அறிவிப்பானது வதந்திக்கு மேலும் வலுசேர்ப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். புதிய செயலியை வாங்குவதால், அதற்கு ஆள்சேர்ப்பு நடத்துவதாகக் கூறுகின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!