நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட எலோன் மஸ்க்

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.
இதற்கிடையில், நார்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார்,
இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று அவர் தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)