கனடாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட எலான் மஸ்க்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சிறிய நகரமான பெல்லாவிற்கு எலொன் மஸ்க் திடீர் விஜயம் செய்துள்ளார். உலகின் முதனிலை செலவ்ந்தரான மஸ்க் இவ்வாறு திடீரென விஜயம் செய்துள்ளார்.
தனது பிரத்தியேக விமானத்தின் ஊடாக அவர் இவ்வாறு குறித்த கரையோர தீவு நகரிற்கு விஜயம் செய்துள்ளார்.
டெஸ்லா மற்றும் எக்ஸ் தளம் என்பனவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக மஸ்க் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்லா பெல்லா நகரில் மஸ்க் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
மஸ்க் தொடர்பில கனடாவில் மாறுபட்ட விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
(Visited 2 times, 3 visits today)