எலோன் மஸ்க் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளார் – பிரெஞ்சு பிரதமர்
சமூக ஊடக வலையமைப்பு X இன் உரிமையாளரான கோடீஸ்வரர் எலோன் மஸ்க், ஜனநாயகங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ தெரிவித்தார்.
“எலோன் மஸ்க் ஜனநாயகங்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறார்,” என்று பேய்ரூ உள்ளூர் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது கொள்கைகளுக்கு எதிராக நிற்க வேண்டும், இல்லையெனில் “ஆதிக்கம் செலுத்தப்படும், நசுக்கப்படும், ஓரங்கட்டப்படும் அபாயம் ஏற்படும்” என்று மஸ்க் எச்சரித்ததைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.





