ஹமாஸை ஒழிப்பது தான் ஒரே வழி – எலான் மஸ்க் அறிவிப்பு

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், நேற்று இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார். அங்கு போரால் பாதிக்கப்பட்ட கிப்புட்ஸில் போர் பாதிப்புக்கு உள்ளான இடங்களை , அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து பார்வையிட்டார்.
அதன் பிறகு இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிடுகையில், போர் பாதிப்புகளை, அதன் படுகொலை காட்சிகளை நேரில் பார்ப்பது மனதை பதற செய்கிறது என்றும், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பதை தவிர இஸ்ரேல் நாட்டிற்கு வேறு வழியில்லை என்றும் பதிவிட்டார்.
அடுத்ததாக எலான் மஸ்க் இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிடுகையில்,
“ஆன்லைனில் அதிகரித்து வரும் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு (இஸ்ரேலிய யூதர்கள்) எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை மஸ்க்கிடம் குறிப்பிட்டு காட்ட வேண்டும் என்று இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.