தென்கொரியாவில் சிறுமியைக் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியை
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/stabbing-the-girl.jpg)
சிறுமியைக் கத்தியால் குத்தியதை தென்கொரியாவில் உள்ள தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒப்புக்கொண்டார்.
கத்தியால் குத்தப்பட்ட 7 வயது சிறுமிக்கு இதயச் செயலிழப்பு ஏற்பட்டது.அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அச்சிறுமி உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 11) தென்கொரியக் காவல்துறை கூறியது.
சொந்தமாகக் காயப்படுத்திக்கொண்ட ஆசிரியைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.அவரை இன்னும் கைது செய்யவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 10) நிகழ்ந்த கத்திக்குத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுமியின் மரணம் குறித்து கவலை தெரிவித்த தென்கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங் மோக், சிறுமியின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
சிறுமியின் கழுத்திலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி காயங்களுடன் கிடந்ததை அவரது பாட்டிதான் முதலில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.