இலங்கையில் இலத்திரனியல் மின் கட்டணமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது!
 
																																		மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் கட்டண முறையானது பல பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இந்த முறை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
இது எதிர்காலத்தில் ஏனைய பிரதேசங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என பொறியியலாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
