இலங்கையில் மின் கட்டண திருத்தம் – பொது மக்களிடம் கருத்து கோர நடவடிக்கை

இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்களைக் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படுமென, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ள போதிலும், குறித்த முன்மொழிவு ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டணத் திருத்தத்தைவிடக் குறைவானதாக இருக்குமென, இலங்கை மின்சார சபை அண்மையில் தெரிவித்திருந்தது.
கடன் நெருக்கடியை நிர்வகிப்பதே மின்கட்டணங்களை அதிகரிப்பதன் நோக்கம் என்றும், இதில் பல காரணிகளும் அடங்குகின்றன என்றும் இலங்கை மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து மின்கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டுமென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.