தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்ததற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 400 யூனிட் வரை 4.60 ரூபாய் பெறப்பட்டு வந்தது. தற்போது 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 6.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 6.45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 8.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 8.55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 9.20 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 9.65 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு ஆகஸ்ட் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
801 முதல் 1000 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 10.20 ரூபாய் பெறப்பட்டது. இருந்து 10.75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 11.80 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.