பிப்ரவரி 12ம் திகதி வங்கதேசத்தில் தேர்தல்
வங்கதேசத்தில்(Bangladesh) பிப்ரவரி 12, 2026 அன்று தேர்தல் நடைபெறும் என்று நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதீன்(A.M.M. Nasir Uddin) அறிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் டிசம்பர் 29ம் திகதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் இருந்து வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி திகதி ஜனவரி 20 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 127.6 மில்லியனுக்கும் அதிகமாகும். வங்கதேசம் முழுவதும் உள்ள 300 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் வங்கதேசத்தினர் அஞ்சல் வாக்குகள் மூலம் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





