2026 தொடக்கத்திற்குள் பங்களாதேஷில் தேர்தல்; முகமது யூனுஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
பங்ளாதேஷில் 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் இடைக்காலத் தலைவர் முகம்மது யூனுஸ் அறிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாகத் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட திரு யூனுசுக்கு தேர்தல் திகதியை நிர்ணயிக்கக் கோரி நெருக்குதல் அளிக்கப்பட்டு வந்தது.
யூனுஸ், 84, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்பார்வையிட ஆணையங்களை அமைத்துள்ளார். தேர்தல் திதியை நிர்ணயிப்பது, அரசியல் கட்சிகள் எந்தந்த அம்சங்களில் இணக்கம் காண்கின்றன என்பதைப் பொறுத்தே உள்ளது.
தேர்தலில் “வாக்காளர் விகிதம் 100 சதவீதம் இருப்பதை உறுதிசெய்வதையே” தாம் கனவு காண்பதாக திரு யூனுஸ் கூறினார்
(Visited 3 times, 3 visits today)