இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மேலும் 5 கட்சிகள்
இலங்கையில் 2025ஆம் ஆண்டிற்காக மேலும் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(4) (ஆ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
புதிதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் விபரம்:
1. சோஷலிச மக்கள் முன்னணி (Socialist Alliance)
2. மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி (People’s Participatory Democratic Front)
3. மலையக அரசியல் அரங்கம் (Malaiyaga Political Arena)
4. சமத்துவக் கட்சி (Samaththuva Kadchi)
5. புரட்சிகர மக்கள் சக்தி (Revolutionary Peoples Power)
இந்த புதிய சேர்க்கையுடன், இலங்கையில் தேர்தல் ஆணையத்தினால் இதுவரை அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.





