இந்தியா

தகுதி நீக்க விவகாரம்! சட்ட ஆலோசனை பெற ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அவகாசம்

எம்.பி. பதவி தகுதி நீக்கம் விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.

அவமதிப்பு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதியிழப்பு செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு அங்கு விசாரணைக்கு நிராகரிக்கப்பட்டதால் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம், ராகுலுக்கு அளித்த தண்டனை சரியானதுதான் என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது

இது தொடர்பாக, உயர்மட்ட சட்ட நிபுணர்களுடன் காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் 23ஆம் தேதி ராகுலின் எம்.பி. பதவி தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது. எனவே, காலியாக உள்ள இடங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.

அப்படியானால், செப்டம்பர் 22ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.அதே நேரத்தில், இந்த லோக்சபாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை மட்டுமே. எனவே, ஓராண்டுக்குள் இடைக்காலம் உள்ளதால், இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓராண்டு அல்லது அதற்கு மேல் கால அவகாசம் இருந்தால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.

எனவே, இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.

இடைத்தேர்தல் நடத்த அவசரம் இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், ஃபைசல் பதவிக்கான தகுதி நீக்கத்தை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, அவரது எம்.பி., பதவி தப்பியது.

எனவே உச்சநீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!