தேர்தல் நிறைவு – அமெரிக்க ஜனாதிபதி யார் என கணித்த பேராசிரியர்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக் கட்சியின் கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவார் என அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஆலன் லிச்மென் (Allan Lichtman) கணித்துள்ளார்.
77 வயது லிச்மென் கடந்த 10 ஜனாதிபதி தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார் என்பதை 9 முறை சரியாகக் கணித்திருக்கிறார். 1984ஆம் ஆண்டு முதல் அவர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கணிப்புகளைச் செய்துவருகிறார்.
ஒரு முறை மட்டுமே அவரது கணிப்புத் தவறானது. 2000ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோர் (Al Gore) வெல்வார் என்று அவர் கூறியிருந்தார்.
இறுதியில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ் (George W. Bush) வென்று ஜனாதிபதி பொறுப்பேற்றார்.
13 ‘சரியா தவறா’ கேள்விகளை மையமாக வைத்து லிச்மென் ஒரு முடிவுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
அதில் குறைந்தது 8 கேள்விகளுக்குச் ‘சரி’ எனும் பதில் கிடைக்கும் வேட்பாளர் வெல்வார் என்று அவர் கணிப்பது வழக்கம்.