எல்லையில் பிரமாண்ட சுவர் கட்டி வரும் எகிப்து!

எகிப்து தனது எல்லையில் சுவர் எழுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஸாவிலிருந்து வரும் பாலஸ்தீன அகதிகளின் வருகையைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் எகிப்தின் சினாய் தீபகற்பப் பகுதியில் குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் அகதிகளின் வருகையைத் தடுக்கும் வகையில் எல்லைப் பகுதியில் 23 அடி உயரத்திற்கு பிரமாண்ட சுவரை எகிப்து எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.
எகிப்தின் சுவர் கட்டும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
(Visited 31 times, 1 visits today)